CIFF-ல் டிசம்பர் 18 அன்று என்ன படம் பார்க்கலாம்?- ராம்ஜி பரிந்துரைகள்

By வி. ராம்ஜி

COLD WAR / ZIMINA WOJNA  | POLAND | 2018 |தேவி, மாலை 4.30 மணி

சோவியத் அணி நாடுகள் மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கு இடையில் நிலவிய விரோதப் போக்கை 'கோல்ட் வார்' என்று அழைக்கின்றனர். இக்காலகட்டத்தில்தான் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இருவேறு வாழ்வியல் பின்னணி கொண்ட இருவருக்கிடையே காதல் உருவாகிறது. அக்காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை மிக அழகான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான விருதை கேன்ஸ் திரைப்படவிழாவில் பெற்றுள்ள படம். 15 விருதுகள். 24 பரிந்துரைகள் பெற்றுள்ளன.

THE SEEN AND THE UNSEEN / SEKALA NISKALA | INDONESIA / NETHERLANDS / AUSTRALIA | 2017 | தேவிபாலா, பிற்பகல் 3.30 மணி

main-content---THE-SEEN-AND-THE-UNSEENjpg100 

10 வயதான தந்த்ரி என்ற சிறுமி, தன்னுடன் பிறந்த இரட்டைச் சகோதரனான தந்த்ரா நீண்ட நாட்கள் தன்னுடன் இருக்க மாட்டான் என்பதை உணர்கிறாள். தந்த்ராவின் மூளை வலுவிழக்கத் தொடங்கி, அவனுடைய எல்லா உணர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து வருகின்றன. அவன் பெரும்பான்மையான நேரத்தைப் படுக்கையிலேயே கழிக்க, விரைவில் தனியாக இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்கிறாள் தந்த்ரி. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான இழப்பு மற்றும் நம்பிக்கையைத் தன்னுடைய உடல் மொழி மற்றும் தன்னைக் கண்டடைதல் மூலம் மாயப் பயணத்தை அடைகிறாள் தந்த்ரி. பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற படம். 6 விருதுகள் மற்றும் 10 பரிந்துரைகளை இப்படம்பெற்றுள்ளது.

THE HEIRESSES / LAS HEREDERAS | PARAGUAY | 2018 | அண்ணா, பகல் 12.00 மணி

main-content---theheiressesjpg100 

60 வயதைக் கடந்த இரு பெண்கள், தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார். பல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம். 31 விருதுகள் 25 பரிந்துரைகள் பெற்ற படம்.

DRESSAGE | IRAN | 2018 | கேஸினோ, பகல் 12.15 மணி

main-content---dressagejpg100 

ஈரானில் இன்று இளைஞர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும் கதை. டெஹ்ரான் நகரை சேர்ந்த 16 வயது பெண் கோல்ஸா. நண்பர்களோடு சேர்ந்து கொண்டு கடைகளில் திருடுபவள். அவள் திருடுவது ஒரு த்ரிலிங்கான அனுபவத்திற்காகத்தான். மற்றபடி பேராசை எண்ணமெல்லாம் இல்லை. ஒரு முறை திருடும்போது கண்காணிப்பு கேமராவை அகற்ற மறந்து விடுகிறார்கள். அடுக்கடுக்கான சம்பவங்களால் கோல்ஸா பெறும் அனுபவங்கள் அவளுக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறது., பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற படம். 2 விருதுகள் 3 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

WHERE THE ALL ROADS END / DONDE ACABAN LOS CAMINOS | GUATEMALA  | 2004 | தாகூர் திரைப்பட மையம், மாலை 4.30 மணி

main-content---WHERE-THE-ALL-ROADS-ENDpng100 

டாக்டர் ஸமோரா என்பவர் தொலைவில் உள்ள நகரத்திலிருந்து தன் டாக்டர் தொழிலைச் செய்ய ஒரு கிராமத்துக்கு வருகிறார். அங்கு பூர்வக்குடி மக்களுக்கும் லேடினோ மொழி பேசும் மக்களுக்கும் இடையெ கடும் பாகுபாடு நிலவுவதைப் பார்க்கிறார். ஆனால் டாக்டர் இதைப் பற்றி கவலைப்படவில்லை. இப்படியிருக்கையில் கிராமத்தில் டைபஸ் தொற்றுநோய் பரவுகிறது. அப்போது பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த 17 வயது மரியா என்ற பெண்ணைச் சந்திக்கிரார், இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.  இவர்கள் இருவரது காதல் விவகாரம் ஊரில் பரவ டாக்டருக்கு பிரச்சினைகள் தொடங்குகின்றன. மரியாவையும் அவர்கள் சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது.. இனி என்ன?... இத்திரைப்படம் ட்ரியெஸ்ட் திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.

YOMEDDINE  | EGYPT |  2018 | கேஸினோ, மாலை 7.00 மணி

main-content---YOMEDDINEjpg100 

“யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும். பேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர். தனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார்.ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச் சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும். எகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது படத்தின் சிறப்பாகும்.இப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்