அஜித் உடல் எடையை குறைத்தது எப்படி? - ரகசியம் பகிரும் ஆதிக் ரவிச்சந்திரன்

By டெக்ஸ்டர்

அஜித்தின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது: ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியசான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார். திடீரென ஒரு நாள் முழுக்க பட்டினியாக இருப்பார். திரும்பவும் அடுத்தநாள் ஒருவேளை உணவு சாப்பிடுவார். வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருப்பார்.

அவருடைய கவனம் முழுவதும் கார் ரேசில் ஈடுபடும்போது உடல் எடையை முழுமையாக குறைத்து ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் படப்பிடிப்பு முடியும் தருவாயில் எடையை குறைத்து ரெடியாகி விட்டார். அது எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அஜித் எப்படியும் உடல் எடையை குறைத்துவிடுவார் என்று காத்திருந்து கடைசியாக அதற்கான காட்சிகளை எடுத்தோம். அஜித்துக்கு எதற்கு ஏஐ தொழில்நுட்பம் எல்லாம். அவர் மிகவும் அழகான, அன்பான, இனிமையான மனிதர். உள்ளே அழகு இருந்தால்தான் அந்த அழகு வெளியேயும் பிரதிபலிக்கும். அவர் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதை செய்யாமல் விடவே மாட்டார்” இவ்வாறு ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரை அரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்.04 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்