அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘எம்புரான்’.
பல்வேறு சர்ச்சைகளை கடந்து குறைவின்றி வசூல் செய்து வருகிறது ‘எம்புரான்’. தற்போது அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘எம்புரான்’. இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வசூலை 10 நாட்களில் கடந்து சாதனை புரிந்திருக்கிறது. இந்த சாதனைக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மோகன்லால்.
உலகளவில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஒட்டுமொத்த வசூலில் 242 கோடியை கடந்தது. தற்போது 250 கோடியை தாண்டியிருக்கிறது ‘எம்புரான்’. இந்தியாவில் உள்ள வசூலை விட பல்வேறு நாடுகளில் மாபெரும் வசூல் செய்திருக்கிறது ‘எம்புரான்’. இதனால் இவ்வளவு பெரிய சாதனையை 10 நாட்களில் நிகழ்த்தியிருக்கிறது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எம்புரான்’. ‘லூசிஃபர்’ என்ற படத்தின் தொடர்ச்சியாக இக்கதையினை உருவாக்கினார் பிரித்விராஜ். இக்கதையின் 3-ம் பாகத்தினையும் விரைவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்.
» ‘ஒன்றிய அரசின் பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயல்’ - முத்தரசன்
» தமிழகத்தில் ஏப்.15 மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்; 61 நாட்கள் அமலில் இருக்கும்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago