இந்தி நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் மோடி, திரை பிரபலங்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தேசப்பற்று மிக்க திரைப்படங்களில் நடித்ததற்காக 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் மனோஜ் குமார். அவரின் இயற்பெயர் ஹரிகிருஷன் கிரி கோஸ்வாமி. தற்போது பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பிறந்தவர் இவர்.

பிரிவினையின்போது, குடும்பத்துடன் டெல்லி வந்தார். 1949-ல் திலிப்குமார் நடித்த ‘சப்னம்’ படத்தில் அவரது கதாபாத்திர பெயரான மனோஜ் குமார் என்பதை, சினிமாவுக்கான தனது பெயராக மாற்றிக் கொண்டார். 1960 மற்றும் 1970-களில் முன்னணி இந்தி நடிகராக இருந்த மனோஜ் குமார், 1957-ம் ஆண்டு வெளியான ‘ஃபேஷன்’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

1961-ல் வெளியான ‘காஞ்ச் கி குடியா’ படம் மூலம் நாயகன் ஆன அவர், தொடர்ந்து, ‘ஆத்மி’, ‘சஜன்’, ‘புரப் அவுர் பஸ்சிம்', ‘ரோட்டி கப்தா அவுர் மகான்', 'கிராந்தி', ‘யாத்கார்’, ‘தஸ் நம்பரி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘உப்கார், ‘ஷோர்’, ‘க்ராந்தி’, ‘கிளர்க்’ உட்பட 7 படங்களை இயக்கியுள்ளார்.

மத்திய அரசு இவருக்கு 1999-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2015-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதையும் வழங்கி கவுரவித்தது. இவர் இயக்குநராக அறிமுகமான ‘உப்கார்’ சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. இவர் மனைவி சஷி கோஸ்வாமி. இவர்களுக்கு குணால், விஷால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவர் மறைவுக்கு இந்தி திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மனோஜ் குமார் மறைந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தவர்.

அவரது தேசபக்தி ஆர்வத்துக்காக நினைவுகூரப்படுபவர். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய உணர்வைத் தூண்டி, தலைமுறைகளை ஊக்குவிக்கும். இந்த துயரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்களும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்