மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ ஏப்.25-ல் ரிலீஸ் உறுதி!

By ஸ்டார்க்கர்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘சுமோ’ ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சுமோ’. இப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கண்டிப்பாக வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுமோ'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சுமோ வீரர் Yoshinori Tashiro நடித்துள்ளார். பிரதான காட்சிகளை ஜப்பானில் காட்சிப்படுத்தி இருப்பதால், இந்தப் படத்தை ஜப்பானிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்