‘டிமான்ட்டி காலனி’ 3-ம் பாகத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கிய படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இப்படத்தின் மொத்த உரிமைகளையும் வாங்கி பிடிஜி நிறுவனம் வெளியிட்டது. இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகத்தை பிடிஜி நிறுவனமே தயாரிக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. இதிலும் அருள்நிதியே நாயகனாக நடிக்கவுள்ளார். முழுக்க ஐரோப்பா நாட்டில் உள்ள மால்டா நகரத்தில் கதை நடப்பது போன்று உருவாக்கியிருக்கிறார். இதனால் அங்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமான படம் ‘டிமான்ட்டி காலனி’. இதன் மாபெரும் வெற்றியால் 2-ம் பாகம் இயக்கினார். அதுவும் வெற்றியடையவே 3-ம் பாகத்தின் பணிகளையும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago