சுந்தர்.சி - வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதன் ஹீரோ சுந்தர்.சி தான் என்றாலும் 2.45 நிமிட ட்ரெய்லர் முழுவதுமே வடிவேலுவின் அக்மார்க் ஆட்டம்தான் அதகளமாக உள்ளது.
க்ரைம் த்ரில்லர் ஒன்லைனில் காமெடி ட்ராக்குகளை புகுத்தி, தனக்கே உரிய பாணியில் சுந்தர்.சி பொழுதுபோக்கு அம்சங்களை தூவி இருப்பதை ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றனர். குறிப்பாக, வடிவேலு உடனான சுந்தர்.சி-யின் ‘அண்டர்ப்ளே’ பாணி நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்பதையே இருவரும் தோன்றும் காட்சிகள் உறுதிபடுத்துகின்றனர்.
பி.டி.சாராக கர்லிங் ஹேருடன் வித்தியாச கெட்டப்பில் வலம் வரும் வடிவேலு, ‘கேங்கர்ஸ்’ படத்திலும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் தன்னைக் கலாய்ப்பதற்கான ஸ்பேஸை வழங்கியுள்ளது தெரிகிறது. ரூ.100 கோடிக்காக ஒன்று சேரும் கேங்கர்ஸின் அட்டகாசங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு எங்கேஜிங்கான ஜாலி அனுபவம் தரும் என நம்பவைக்கிறது ட்ரெயல்ர். குறிப்பாக, வடிவேலுவின் விதவிதமான கெட்டப்களும், பாடி லேங்குவேஜும் செமயாக ஒர்க் ஆகியிருக்கிறது.
சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இதில், ‘சிங்காரம்’ என்ற ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல ஆண்டுகள் கழித்து சுந்தர்.சி – வடிவேலு காமெடி கூட்டணி இணைந்துள்ள இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகிறது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது. அதன் வீடியோ...
» ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான் கான்?
» ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு நானும் காத்திருக்கிறேன்: விக்ரம்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago