ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான் கான்?

By ஸ்டார்க்கர்

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்.

இப்படம் மோசமான விமர்சனங்களையும், வசூலில் கடும் சரிவையும் சந்தித்து வருகிறது. சல்மான் கானின் மோசமான படங்களில் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை சல்மான்கான் இன்னும் முடிவு செய்யவில்லை.

தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள படத்தில் சல்மான் கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்யும் விதமாக புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

ஏனென்றால், ‘மிஸ்டர் பச்சன்’ என்ற மாபெரும் தோல்வி படத்தைக் கொடுத்தவர் ஹரிஷ் ஷங்கர். அவருடைய இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘உஸ்தாத் பகத் சிங்’ படமும் பவன் கல்யாண் தேதிக்காக காத்திருக்கிறது. இந்தச் சூழலில் சல்மான் கான் படத்தை இயக்கவுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இருவருமே தோல்வியில் இருந்து மீண்டு வந்தால்தான் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்