கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகிறது.
மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் முதல் தோற்ற புரமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “‘சர்தார்’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு கிராமத்து நாடக நடிகனை, பயிற்சி கொடுத்து ‘ஸ்பை’யாக்கி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கிறார்கள். உண்மையில் நடந்த சில விஷயங்களின் இன்ஸ்பிரேஷனில் இருந்து இயக்குநர் அந்த கதையை உருவாக்கி இருந்தார்.
பொது நலனுக்காகப் போராடுகிற ஒரு கேரக்டர்தான் அது. அந்த கதாபாத்திரம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அப்படி வந்தால், என்ன நோக்கம் இருக்கும் என்று கேள்வி எழுந்தது. உண்மையிலேயே இதில் ஒரு பெரிய விஷயத்தை இயக்குநர் சொல்லி இருக்கிறார். ஹீரோ - வில்லன் இரண்டு பேருமே வலுவானவர்களாக இருந்தால்தான் போர் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இந்தப் படம் மிகப்பெரிய போரைப் பற்றிப் பேசப்போகிறது. அதில் ஒரு பகுதியாக எஸ்.ஜே.சூர்யா சார் இணைந்திருக்கிறார். ப
டத்துக்காக நிறைய செலவு செய்து செட் அமைத்திருக்கிறார்கள். நிறைய உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்” என்றார். இயக்குநர் பி.எஸ்.மித்ரன், எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் லஷ்மன்குமார் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago