‘கண்ணப்பா’ ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்?

By ப்ரியா

‘கண்ணப்பா’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தாமதத்தினால், படத்தின் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘கண்ணப்பா’. தற்போது இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடையவில்லை என்று விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார். விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதனை மோகன் பாபு தயாரித்திருக்கிறார். இதில் பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் என வெளியிடப்பட்டு வந்தது. திடீரென்று படத்தின் வெளியீடு ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

‘கண்ணப்பா’ படத்தின் டீசர் வெளியீட்டை அனைத்து மொழிகளிலும் நடத்தினார் விஷ்ணு மஞ்சு. இதுவரை படத்தை விளம்பரப்படுத்தவே பல கோடிகளை செலவழித்திருக்கிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்