பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
‘ட்ரெயின்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவருடைய அடுத்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
இன்று உகாதி பண்டிகை முன்னிட்டு, பூரி ஜெகந்நாத் - விஜய் சேதுபதி கூட்டணி படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. தற்போது இதில் விஜய் சேதுபதி உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
‘லைகர்’ மற்றும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ என பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு படங்களுமே படுதோல்வியை தழுவின. இதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்கள் கூட, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிக்க தயங்கினார்கள். ஆனால், விஜய் சேதுபதி உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
» பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடக்கம்
» ‘காஸ்டிங் ஏஜெண்டுகள் ஜாக்கிரதை...’ - ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago