மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள படம் ‘டெஸ்ட்’. இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், இயக்குநராக அறிமுகமாகிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் ஏப்.4-ல் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது சித்தார்த் கூறும்போது, “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள்.
அதனால், கிரிக்கெட்டராக வெறுமனே நடித்து ஒப்பேற்ற முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரோலில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்ஃபயர் ஆகி, இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும் போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான்” என்றார்.
நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின், இசை அமைப்பாளர் சக்தி கோபாலன், இயக்குநர் சஷிகாந்த் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago