மோகன்லாலின் எல் 2: எம்புரான் படம் பார்க்க கல்லூரிக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

மோகன்லால் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் 'எல் 2: எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ளார்.

மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் ஜெரோம் பிளின் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. 24 மணி நேரத்திலேயே அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக இந்தப் படம் சாதனை படைத்தது. தற்போது வரை முன்பதிவில் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெங்களூருவில் உள்ள குட்ஷெப்பேடு கல்லூரி, இந்தப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு வரும் 27-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் காலை 7 மணி காட்சிக்கு டிக்கெட்டை முன்பதிவு செய்தும் கொடுத்துள்ளது. கல்லூரியின் சேர்மன் மோகன்லாலின் தீவிர ரசிகர் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்