‘சூர்யா 45’ படத்துக்காக விரைவில் சூர்யா மற்றும் த்ரிஷா பங்குபெறும் பிரம்மாண்ட நடனக் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளார்கள்.
சென்னையில் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்காக விரைவில் பிரம்மாண்ட அரங்கில் பாடலொன்றை படமாக்கவுள்ளார்கள். இதில் சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் பங்கேற்று நடனமாட இருக்கிறார்கள். இதற்காக திருவிழா அரங்கு தயாராகி வருகிறது.
இப்பாடலில் சூர்யா - த்ரிஷா உடன் 500-க்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள். இப்பாடல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள். சமீபத்திய சூர்யா படங்களில் இப்படியான பாடல் இடம்பெற்றதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பாடலுக்கான நடன அமைப்புகளை ஷோபி மேற்கொள்ளவுள்ளார்.
» தில் ராஜு தயாரிப்பில் ‘மார்கோ’ இயக்குநர்!
» விக்ரமின் மாஸ் ஆக்ஷன் அவதாரம் - ‘வீர தீர சூரன் - பார்ட் 2’ ட்ரெய்லர் எப்படி?
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago