தில் ராஜு தயாரிப்பில் ‘மார்கோ’ இயக்குநர்!

By ஸ்டார்க்கர்

தில் ராஜு தயாரிக்கவுள்ள படத்தினை ‘மார்கோ’ இயக்குநர் ஹனிஃப் அதேனி இயக்கவுள்ளார்.

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்த மலையாள படம் ‘மார்கோ’. வசூல் செய்த அளவுக்கு, அதன் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் சர்ச்சையையும் உருவாக்கியது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை தடை விதித்துள்ளது. மேலும், ஓடிடியிலும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

‘மார்கோ’ வெற்றியினால் இயக்குநர் ஹனிஃப் அதேனிக்கு பல்வேறு திரையுலகில் படம் இயக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கரண் ஜோஹர் தயாரிக்கும் படத்தினை அடுத்ததாக இயக்கவுள்ளார் ஹனிஃப் அதேனி. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த புதிய படத்தினை தில் ராஜு வழங்க, குரு பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘மார்கோ’ படத்தில் உன்னி முகுந்தன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹனிஃப் அதேனி இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

மேலும்