‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் ஷாரூக்கான்?

By ஸ்டார்க்கர்

சுகுமார் இயக்கத்தில் ஷாரூக்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பல்வேறு முன்னணி நடிகர்கள் சுகுமார் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்கள். இதில் ஷாரூக்கானும் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘புஷ்பா 2’ பார்த்துவிட்டு சுகுமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் ஷாரூக்கான். இதனால் அவருடைய குழுவினர் சுகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதால், அதற்கு அடுத்த படமாக ஷாரூக்கான் படத்தினை இயக்குவார் என்கிறார்கள்.

ஷாரூக்கான் குழுவினரிடம் அவருக்கான கதை உள்ளிட்டவற்றை கூறியிருக்கிறார் சுகுமார் எனவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுகுமாரும் ராம்சரண் படத்தை முடிக்க வேண்டும், ஷாரூக்கானும் ‘கிங்’ படத்தை முடிக்க வேண்டும். இருவருமே அவர்களது பணிகளை முடித்துவிட்டு இணைந்து படம் பண்ணுவார்கள் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ படத்தில் நடிப்பதற்கு மே மாதத்தில் இருந்து தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஷாரூக்கான். இதில் அவருடைய மகன் சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். தற்போது ராம்சரண் நடிக்கும் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் சுகுமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்