“அதீத வன்முறை; ‘மார்கோ’ படத்தை பார்க்க முடியவில்லை”: நடிகர் கிரண் அப்பாவரம் கருத்து

By செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் தன்னால் ‘மார்கோ’ படத்தினை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

‘மார்கோ’ படம் குறித்து கிரண் அப்பாவரம், “‘மார்கோ’ படத்தின் அதிகப்படியான வன்முறை காரணமாக எனது மனைவியால் பார்க்க முடியவில்லை. நானும் முழுமையாக படத்தைப் பார்த்து முடிக்க முடியவில்லை. ஆகையால் படம் முடிவதற்குள் வெளியேறிவிட்டோம். எனது மனைவி கர்ப்பமாக இருப்பதால், அப்படத்தின் வன்முறையை ஜீரணிக்க அவருக்கு கடினமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ‘மார்கோ’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அனுமதி மறுத்துவிட்டது. மேலும், ஓடிடி தளத்திலிருந்தும் இப்படத்தினை நீக்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளது. இந்தச் சர்ச்சையினால் இது போன்ற வன்முறை நிறைந்த படத்தினை இனி தயாரிக்கப் போவதில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு டிச.20-ம் தேதி மலையாளத்தில் வெளியான படம் ‘மார்கோ’. இதன் மாபெரும் வெற்றியினால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஹனிஃப் அதேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் உன்னி முகுந்தன் நாயகனாக நடித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்