லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் ஆமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தற்போது முடிந்துவிட்டன. மீதமிருக்கும் சில காட்சிகளையும் முடித்துவிட்டு இந்த ஆண்டே படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூலி’ படத்தின் பிரத்யேக பிடிஎஸ் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
» கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி!
» ‘2021 டி20 WC தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது!’ - வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சிப் பகிர்வு
ஆனால் இவற்றில் ஆமிர்கானின் புகைப்படம் இடம்பெறவில்லை. படக்குழு தொடர்ந்து அது குறித்த தகவலை ரகசியமாகவே வைத்துவருகிறது. எனினும் இதே நாளில் தான் ஆமீர்கானும் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக தனது எக்ஸ் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் ஆமிர்கான் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago