‘பிரம்மாஸ்திரா 2’ கண்டிப்பாக உருவாகும் என்று ரன்பீர் கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘பிரம்மாஸ்திரா’ 2-ம் பாகம் குறித்த எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது. தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் ‘பிரம்மாஸ்திரா 2’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ரன்பீர் கபூர். அதில் “பிரம்மாஸ்திரா என்பது அயன் முகர்ஜி நீண்ட காலமாக ஒரு கனவாக வளர்த்த ஒன்று என உங்களுக்கு தெரியும்.
தற்போது ‘வார் 2’ படத்தில் பணியாற்றி வருகிறார். அது வெளியானவுடன், ‘பிரம்மாஸ்திரா 2’வில் பணிபுரிய துவங்குவார். கண்டிப்பாக அப்படம் நடக்கும். நாங்கள் இதுவரை அப்படம் குறித்து அதிகமாக பேசவில்லை. ஆனால் ‘பிரம்மாஸ்திரா 2’ நிச்சயமாக நடக்கும். விரைவில் அது குறித்து சில அறிவிப்புகள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிரம்மாஸ்திரா’. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை படைத்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago