‘மூக்குத்தி அம்மன் 2’ பணிகள் தொடக்கம் - ரஜினி வாழ்த்து

By ஸ்டார்க்கர்

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கார்த்தி, விஷால், ‘மூக்குத்தி அம்மன் 2’, இந்திப் படம் என பல்வேறு தகவகள் வெளியாகி இருக்கிறது. தற்போது சுந்தர்.சி அடுத்ததாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதனை வேல்ஸ் நிறுவனம், ரெளடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ். இதன் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை சென்னையில் நாளை (மார்ச் 6) பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இந்தப் படத்தில் நயன்தாரா உடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி பணிபுரியவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்