ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘டிராகன்’

By செய்திப்பிரிவு

உலகளவில் ‘டிராகன்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. இப்படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகளவில் இப்படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் 1 மில்லியன் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2025-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அமெரிக்காவில் 1 மில்லியனை கடந்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் இப்படத்துக்கு பின் சில படங்கள் வெளியானாலும், அவை எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தொடர்ச்சியாக திரையரங்க உரிமையாளர்கள் ‘டிராகன்’ படத்துக்கு தான் முன்னிரிமை அளித்து வருகிறார்கள். மேலும், தெலுங்கிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை அந்நிறுவனமே உலகமெங்கும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்