‘கில்’ இயக்குநருடன் இணையும் ராம் சரண்?

By ஸ்டார்க்கர்

‘கில்’ இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ராம் சரணுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
.
புஜ்ஜி பாபு சனா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ராம் சரண். இதனைத் தொடர்ந்து சுகுமார் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நிகில் நாகேஷ் பட் இயக்கவுள்ள புராணப் படத்தில் நடிக்க ராம் சரணுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டணி படத்தினை தயாரிக்க மனு மண்டேனா முன்வந்துள்ளார். இதற்காக பேச்சுவார்த்தை விரைவில் முடிவுற்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

நிகில் நாகேஷ் பட் படத்தினை சுகுமார் படத்துக்கு முன்பாக முடித்துவிடலாம் என்ற திட்டத்திலும் இருக்கிறார் ராம்சரண். புஜ்ஜி பாபு சனா, நிகில் நாகேஷ் பட், சுகுமார் என அடுத்தடுத்த படங்கள் வரிசையினை திட்டமிட்டு இருக்கிறார். நிகில் நாகேஷ் பட் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறப்படுகிறது.

2023-ம் ஆண்டு வெளியான ‘கில்’ படத்தினை இயக்கியவர் நிகில் நாகேஷ் பட். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் இந்தியளவில் மாபெரும் பாராட்டைப் பெற்றது. மேலும் படமும் லாபம் ஈட்டியது. இதனால் இவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது ராம் சரண் நடிப்பது உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்