மீண்டும் மம்மூட்டி படத்தில் நயன்தாரா!

By ஸ்டார்க்கர்

மம்மூட்டி நடித்து வரும் புதிய படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புதிய நியமம்’ உள்ளிட்ட சில படங்களில் மம்மூட்டி – நயன்தாரா கூட்டணி இணைந்து நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

‘டேக் ஆஃப்’ மற்றும் ‘மாலிக்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் மகேஷ் நாராயணன். இவர் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது மம்மூட்டி நடித்து வரும் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கிறார். இப்படத்துக்கு ‘MMMN’ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படம் மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. ஏனென்றால் இதில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஃபகத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தன் பணிபுரிந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்