விஜய் நடிக்கும் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதில் இந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்கின்றனர். இதை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இது பாலகிருஷ்ணா நடித்து தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால் இதுதான் அவருக்குக் கடைசி படம் என்கிறார்கள். அதனால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் பெயரை அறிவித்துள்ளனர். அதன்படி இதற்கு 'ஜன நாயகன்' என்று டைட்டில் வைத்துள்ளனர். முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago