சூர்யா நடித்து வரும் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. இதன் 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதியில் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.
இதனிடையே, இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இதில் சூர்யா வக்கீலாக நடித்து வருகிறார். அவருக்கு எதிராக வாதாடும் வக்கீலாக ஆர்.ஜே.பாலாஜியே நடித்திருக்கிறார். இதற்கு சூர்யாவும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் சூர்யா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago