அனைத்து பிரச்சினைகளும் முடிவுற்று, ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது ‘மதகஜராஜா’. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். அந்நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால், ‘மதகஜராஜா’ வெளியாகாமல் இருந்தது.
பலமுறை வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும் வெளியாகவில்லை. தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் பொங்கல் வெளியீடு என்று ‘மதகஜராஜா’ விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதிய ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், பிரகாஷ் ராஜ், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க காமெடி பின்னணியில் கமர்ஷியல் படமாக இது அமைந்துள்ளது. இம்முறை கண்டிப்பாக வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago