ஹைதராபாத்: பொழுதுபோக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினால் கேங்ஸ்டர் இயக்குநர் என்று இயக்குநர் ராஜமவுலி புகழாரம் சூட்டியுள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “இந்த படம் ஷங்கருக்கு தெலுங்கில் முதல் படமாக நான் பார்க்கவில்லை. காரணம் எங்களில் பலருக்கும் அவர் ஒரு தமிழ் இயக்குநர் அல்ல. தெலுங்கு இயக்குநர்.
ஷங்கர் மீதான அன்பு மற்றும் மரியாதை காரணமாக இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்போது உள்ள இளம் தலைமுறை இயக்குநர்கள் பலரும் எங்களை பெருமிதத்துடன் பார்க்கலாம். ஆனால் நாங்கள் அனைவரும் வியந்து பார்க்கும் நபர் ஷங்கர் தான். பொழுதுபோக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினால் கேங்ஸ்டர் இயக்குநர். அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த எங்களைப் போன்ற பலருக்கும் ஷங்கர் தான் உத்வேகமாக இருந்தார்” இவ்வாறு ராஜமவுலி தெரிவித்தார்.
வாசிக்க> ‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? - மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!
» சபரிமலை சிறப்பு தரிசன திட்டத்தில் குளறுபடி: தேவசம் போர்டு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
» ‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? - மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லர் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago