‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
2024-ம் ஆண்டு குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு, பெரும் லாபம் ஈட்டிய படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இதன் இயக்குநர் சிதம்பரத்துக்கு பல்வேறு மொழிகளில் படம் இயக்கும் வாய்ப்புகள் குவிந்தது. ஆனால், அடுத்து இந்திப் படமொன்றை இயக்க ஒப்பந்தமானார். அப்படம் எப்போது துவங்கும் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது சிதம்பரத்தின் அடுத்தப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் மலையாளத்திலேயே உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இதனை தயாரிக்கவுள்ளார்கள்.
இப்படத்தின் கதையை ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் எழுதியிருக்கிறார். இந்தக் கதையினை இயக்கும் பொறுப்பு மட்டுமே சிதம்பரம் ஏற்றுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago