‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? - இயக்குநர் பாலா பதில்

By ஸ்டார்க்கர்

‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியதற்கான காரணத்தை இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. முதலில் இப்படம் சூர்யாவை வைத்து தொடங்கப்பட்டது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டு, பின்னர் அருண் விஜய்யை வைத்து இயக்கி முடித்துள்ளார் பாலா. தற்போது ‘வணங்கான்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார்.

அப்பேட்டியில் சூர்யா நடித்த ‘வணங்கான்’ படத்தை ஏன் தொடர முடியவில்லை என்ற காரணத்தை தெரிவித்துள்ளார் பாலா. அதில், “அருண் விஜய்க்காக கதையை மாற்றவில்லை. அதே கதைதான். இது சூர்யா விலகிய படமல்ல. நாங்கள் இருவருமே பேசி முடிவெடுத்து, வேற படம் செய்து கொள்ளலாம் என தீர்மானித்தோம்.

சூர்யாவை வைத்து நிஜமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. சுற்றுலா தளமான இடத்தில் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தும்போது கூட்டம் அதிகமாக கூடுகிறது. சூர்யா விலகிவிட்டார் என்றெல்லாம் கிடையாது. இருவரும் பேசி எடுத்த முடிவு தான். இப்போதும் அதே உறவு நீடிக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் ஏதேனும் தவறு செய்தால், அதை கண்டிக்கக் கூடிய உரிமையினை சூர்யாவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார் பாலா.

இதுவரை ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இப்போது பாலா வெளிப்படையாக பேசியிருப்பதால், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையத்தில் இதெல்லாம் ஒரு காரணமா, வேறொரு காரணம் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்