‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதைக்களம் என்ன?

By செய்திப்பிரிவு

‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதைக்களம் என்னவென்று படக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு டிக்கெட் புக்கிங், படத்தின் தணிக்கை பணிகள் உள்ளிட்டவைக்காக படத்தின் கதைக்களம் பற்றிய குறிப்பு அனுப்பப்படுவது வழக்கம். அதிலிருந்து படத்தின் கதைக்களம் இணையத்தில் வெளியாகிவிடும். அப்படி தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது.

அதன்படி, ‘புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் ராம், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஆழமாக வேரூன்றியிருக்கும் ஊழலையும், அரசாங்கத்தில் வேரூன்றியிருக்கும் திறமையின்மையையும் அவர் உடனடியாக எதிர்கொள்கிறார். சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் நோக்கில் அவர் மேற்கொள்ளும் மாற்றங்களால், ஒரு செல்வாக்கு மிகுந்த மாநில அமைச்சருடன் மோதல் ஏற்படுகிறது’ என்பதே ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதைக்களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்