இசையுலகுக்கு ‘ஐயையோ’ என்ற பாடலின் மூலம் அறிமுமாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ். முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ தொடங்கி பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய மகன் சாமுவேல் நிக்கோலஸும் இசையுலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. மாறுபட்ட குணாதிசயங்கள் குன்றாமல் பதிவு செய்துள்ள பாடலாக ‘ஐயையோ’ அமைந்துள்ளது. இப்பாடலுக்கு இசையமைத்து மட்டுமன்றி பாடி, நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.
இப்பாடலைப் பற்றி சாமுவேல் நிக்கோலஸ், “ ‘ஏழாம் அறிவு’ படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். ‘தேவ்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது 'ஐயையோ' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மிக்க மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார்.
தனது நான்காம் வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின் படி சாமுவேல் நிக்கோலஸ் இசையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது. 'ஐயையோ' பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத, சனா மரியம் இயக்கியுள்ளார்.
» “நடிகர்கள்தான் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும்” - தெலங்கானா முதல்வர் ரேவந்த்
» 5 நாட்களில் 50 கோடி வசூல் - ‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு!
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago