‘ஜின் கதாபாத்திரத்துக்கு 8 மாத உழைப்பு’

By செய்திப்பிரிவு

‘பிக் பாஸ்’ முகேன் ராவ், பாவ்யா திரிகா முதன்மை வேடங்களில் நடிக்கும் படம், ‘ஜின் தி பெட்’. இதில் பால சரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி என பலர் நடிக்கின்றனர். இதை டி.ஆர். பாலா இயக்கியுள்ளார்.

ஃபேரிடேல் பிக்சர்ஸ், ஏஆர் டூரிங் டாக்கீஸ், விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை டி.ஆர்.பாலா, அனில் குமார் ரெட்டி தயாரித்துள்ளனர். வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பு செய்துள்ளார்.

படம்பற்றி இயக்குநர் டி.ஆர்.பாலா கூறும்போது, “உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு இதன் கதை நடக்கிறது. இதில் இடம் பெறும் ‘ஜின்’ என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்த கதாபாத்திரம் சுமார் 40 நிமிடம் இடம் பெறுகிறது. எட்டு மாதமாக உழைத்து இக்கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு அது புது அனுபவத்தைத் தரும். திகில், ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த படமாக உருவாகி வருகிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்