ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ.1,409 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படம் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இந்தியில் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி ரூ.561.50 கோடியை இந்தி வெர்ஷனில் மட்டும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வெர்ஷனில் ரூ.50 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் வசூல்தான் படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, படம் உலக அளவில் 11 நாட்களில் ரூ.1,409 கோடியை வசூலித்துள்ளது.
இதன் மூலம் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.1,300 கோடி வசூல் சாதனையை முறியடித்து மூன்றாவது இடம் பிடித்துள்ளது ‘புஷ்பா 2’. இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய படத்தின் பட்டியலில் ஆமீர்கானின் ‘தங்கல்’ ரூ.2,122.3 கோடி வசூலித்து முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ ரூ.1,788.06 கோடியை வசூலித்துள்ளது. மூன்றாவது இடத்தில் ரூ.1,400 கோடிக்கும் அதிகமான வசூலில் ‘புஷ்பா 2’ இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ படத்தின் இரண்டாவது பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ள இந்தப் படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago