அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம், கடந்த 5-ம் தேதி வெளியானது. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, 4-ம் தேதி இரவு ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதைக் காண ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா வந்ததால் அவர்களை காண கூட்டம் அலைமோதியது.
நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவர் மகன் படுகாயம் அடைந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன்,திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் மீது சிக்கடபள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அல்லு அர்ஜுனை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர், நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 27-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே அவரது வழக்கறிஞர்கள் இடைக்கால ஜாமீன்கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தை நாடினர். அங்கு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
பழி சுமத்துவதா? ராஷ்மிகா பதிவு: இதற்கிடையே ‘புஷ்பா’ நாயகி ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது பார்ப்பதை நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானதுதான். வருத்தமானதும் கூட. அதற்காக எல்லா பழியையும் தனிப்பட்ட ஒருவர் மேல் சுமத்துவது வருத்தமளிக்கிறது. இப்படியொரு நிலைமை நம்ப முடியாததாகவும் வேதனையாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago