சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்த நோட்டீசுக்கு நயன்தாரா, சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன, என்று பதிலளித்திருந்தார் .
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் தரப்பில் வழக்குத் தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்குத் தொடர அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில், அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் உண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், தாக்கல் செய்யப்படும் பதில்மனுவுக்கு தனுஷ் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
7 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago