நகைச்சுவை நடிகர் சுனில் பாலை கடத்தி ரூ.7.5 லட்சம் பறித்த கும்பல்: மும்பை செல்ல ரூ.20,000 கொடுத்து அனுப்பி வைத்தனர்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நகைச்சுவை நடிகர் சுனில் பாலை கடத்திய மர்ம கும்பல் அவரிடமிருந்து ரூ.7.5 லட்சம் பணத்தை பிணைத்தொகையாக பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சுனில் பால். திரைப்படங்களில் நடித்து வரும் இவர், பல்வேறு நகரங்களில் தனியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரை அண்மையில் 5 பேர் கொண்ட கும்பல் அணுகி, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட சுனில் பால் மும்பையிலிருந்து டெல்லிக்கு அவர்களுடன் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் நாடகமாடி சுனில் பாலை மும்பையிலிருந்து மீரட் நகருக்கு கடத்திச் சென்றுள்ளனர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.20 லட்சம் தரவேண்டும் என்றும் சுனில் பால் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர். இறுதியில் ரூ.7.5 லட்சத்தைத் தருவதற்கு சுனில் பால் குடும்பத்தார் ஒப்புக்கொண்டுள்ளனர். தங்களுக்கு வேலை இல்லாததால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும், வேலை கிடைத்த பின்னர் பணத்தை திரும்பித் தருவதாகவும் அவர்கள் சுனில் பாலிடம் தெரிவித்துள்ளனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் சுனில் பாலை மீரட் நகரில் விடுவித்துள்ளனர். மேலும், அவர் மும்பை திரும்புவதற்கு வசதியாக அவரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்து விட்டு தப்பியுள்ளனர்.

மும்பை திரும்பிய நிலையில், இதுதொடர்பாக போலீஸில் சுனில் பால் புகார் கொடுத்தார். இதுகுறித்து சுனில் பால் கூறும்போது, “முதலில் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் வரவில்லை. டெல்லி விமானநிலையத்திலிருந்து கார் மூலம் என்னை அழைத்துச் சென்றனர். மீரட் சென்ற பின்னர் என்னை மற்றொரு வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். பின்னர் கண்களை கட்டி வைத்தனர். முரண்டுபிடித்தால் விஷ ஊசி இருப்பதாகவும், அதைப் போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பின்னர் எனது குடும்பத்தார் மூலம் ரூ.7.5 லட்சத்தை 2 வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிய பின்னர், என்னை விடுவித்தனர். வீடு வந்து சேர்ந்ததும் தான் எனது உயிரே எனக்குத் திரும்பி வந்தது" என்றார்.

இந்நிலையில், பிணைத்தொகையாக பெற்ற தொகையில் அவர்கள், மீரட்டிலுள்ள 2 நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்கியுள்ளளது தெரியவந்துள்ளது. மீரட்டிலுள்ள ஆகாஷ் கங்கா, அக்சத் ஜுவல்லர்ஸ் ஆகிய நகைக்கடைகளில் இந்த நகைகள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை சான்டா குரூஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்