கோலாகலமாக நடைபெற்ற நாக சைதன்யா - சோபிதா திருமணம்! 

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோபிதா துலிபாலா ‘பொன்னியின் செல்வன்’ உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்றது. திருமண சடங்களுகள் நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்துக்கு சிரஞ்சீவி, ராம் சரண், ராஜமவுலி, பிரபாஸ் உள்ளிட்ட திரையுலகைச் சேரந்த பலரும் கலந்துகொண்டனர்.

தன்னுடைய மகன் திருமணம் குறித்து நாகார்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அழகான புதியதோர் அத்தியாயத்தை சோபிதாவும், நாக சைதன்யாவும் தொடங்குவதை பார்ப்பது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். இருவருக்கும் வாழ்த்துகள். குடும்பத்தில் இணைய உள்ள சோபிதாவை மனமார வரவேற்கிறோம். ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்துவிட்டீர்கள் சோபிதா.

அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலையை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் மூலம் இந்த கொண்டாட்டமான தருணம் முழுமை பெற்றுள்ளது. இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய அன்பும், வழிகாட்டுதலும் இருப்பதாக உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்