‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியில் கூட்ட நெரிசல்: ஹைதராபாத்தில் பெண் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்​துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகு​மார் இயக்கி​யுள்ள இந்தப் படம் இன்று (டிச.5) வெளியானது.

தெலுங்​கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளி​யீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி​லும் ரிலீஸ் ஆகிறது. படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் டிக்​கெட் கட்ட​ணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்​கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்​கி​ன. மேலும், புக் ​மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்​கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றது.

இப்படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழகத்தைத் தவிர பரவலாக பல மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை ப்ரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த பெண் ரேவதிக்கு வயது 39 எனத் தெரிகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய அப்பெண்ணை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகத் தெரிகிறது. ஹைதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் 9.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்