சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சூர்யா நடிப்​பில் சமீபத்​தில் வெளியான ‘கங்​குவா’ படத்​துக்கு சமூக வலைதளங்​களில் எதிர்​மறையான விமர்​சனங்கள் எழுந்தன. இந்நிலை​யில் புதிதாக வெளி​யாகும் தமிழ்ப் படங்களை முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை விதிக்​கக்​கோரி, நடப்பு தமிழ் திரைப்பட தயாரி்ப்​பாளர்கள் சங்கம் சார்​பில் அதன் பொதுச் செயலாளர் டி.சிவலிங்கம் என்ற சிவா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தார்.

அதில், ‘‘சமீப​காலமாக புதிதாக வெளி​யாகும் திரைப்​படங்களை யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்​களில் விமர்​சனம் என்ற பெயரில் திட்​ட​மிட்டு அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது. இந்த எதிர்மறை விமர்​சனங்கள் படம் பார்க்க செல்​லும் ரசிகர்​களின் மனநிலையை மாற்றி, பல படங்களை தோல்​வியடைய செய்​கின்றன. இதனால் பல கோடிகளை செலவிட்டு பெரிய பட்ஜெட்​டில் படங்களை தயாரிக்​கும் தயாரிப்​பாளர்கள் கடும் நஷ்டத்​துக்கு ஆளாக நேரிடு​கிறது. எனவே புதிய படங்கள் வெளி​யாகும்​போது அந்தப் படங்கள் பற்றி முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் செய்​வதற்குத் தடை விதிக்க வேண்​டும். அதேபோல விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூ-டியூப், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்​களுக்​கும் கட்டுப்​பாடுகளை விதிக்க வேண்​டும். இதுதொடர்பாக விதி​முறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்​கும் உத்தரவிட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு, நீதிபதி எஸ். சவுந்தர் முன் விசா​ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணியன் ஆஜராகி, பல கோடி ரூபாய் செலவில் எடுக்​கப்​பட்டு வெளி​யிடப்​படும் திரைப் படங்களை விமர்​சனம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்​துக்​களைத் திட்​ட​மிட்டு உள்நோக்​கத்​துடன் பரப்பு​கின்​றனர். இதனால் முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் செய்ய தடை விதிக்க வேண்​டும், என வாதிட்​டார். இதையடுத்து நீதிபதி, விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்​பினால் அதுதொடர்பாக சம்பந்​தப்​பட்​ட​வர்கள் மீது போலீஸில் புகார் அளி்க்​கலாம். அதே நேரம் பொது​வெளி​யில் விமர்​சிப்பது என்பது தனிமனித கருத்து சுதந்​திரம் என்ப​தால் பொத்​தாம் பொதுவாக எந்த உத்தர​வும் பிறப்​பிக்க முடி​யாது. சில படங்​களுக்கு நேர்​மறை​யான, ஆக்கப்​பூர்​வமான விமர்​சனங்​களும் வருகின்றன. எனவே மனுதா​ரரின் கோரிக்கை தொடர்பாக மத்​திய, ​மாநில அரசுகளும், யூ-டியூப் நிறு​வன​மும் 4 வார ​காலங்​களி்ல் ப​திலளிக்​க வேண்​டும்​, என உத்​தர​விட்​டு ​விசா​ரணையை தள்​ளி வைத்​துள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

மேலும்