இந்தி நடிகர் விக்ராந்த் மாஸே, ‘12த் ஃபெயில்’ படம் மூலம் கவனிக்கப்பட்டார். ‘செக்டர் - 36’, ‘த சபர்மதி ரிப்போர்ட்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், நடிப்பிலிருந்து விலகுவதாக அவர் பதிவை மேற்கோள்காட்டி செய்தி வெளியானது. அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சில வருடங்கள் அற்புதமாக அமைந்தன. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக இப்போது குடும்பத்தைக் கவனிக்க முடிவெடுத்துள்ளேன்.
அடுத்த ஆண்டில் (2025) இறுதியாக ஒருமுறை சந்திப்போம்” எனத் தெரிவித்திருந்தார். அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர் தனது முடிவை மாற்ற வேண்டும் என்றும் திரையுலகினரும், ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தான் நடிப்பை விட்டு விலகவில்லை என்று விக்ராந்த்மாஸே தெரிவித்துள்ளார். மேலும், “என் உடல்நிலை காரணமாகவும் குடும்பத்துக்காகவும் நீண்ட இடைவெளி தேவை. நான் கூறியதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago