நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’, டிச.5-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா, 2-ம் பாகத்துக்கு ரூ.10 கோடி வாங்கியதாகவும் இப்போது இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் அவர் தான் என்று தகவல் பரவி வருகிறது.
‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இதுபற்றி கேட்டபோது, மறுத்தார். “எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் சுகுமார் இருப்பதால், புரமோஷன்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. ‘புஷ்பா’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago