விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான ‘விஜய் 69’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோவா சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் பணம் கொட்டிக்கிடக்கும் ப்ரேம் ஒன்றும் காட்டப்படுகிறது. அதன் அடிப்படையில் பணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக உள்ளதாக தெரிகிறது. பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. படத்தொகுப்பை பிரவீன் கே.எல்.கவனிக்கிறார். படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்