நெட்ஃபிளிக்ஸ், நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு எதிராக வழக்குத் தொடர தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துக்கு ஐகோர்ட் அனுமதி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் வழக்குத் தொடர அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்த நோட்டீசுக்கு நயன்தாரா, சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன, என்று பதிலளித்திருந்தார் .

இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய உண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்