சென்னை: தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 2வது சிங்கிளான ‘காதல் ஃபெயில்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2வது சிங்கிள் எப்படி? - ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். அவரின் ‘கரகர’ குரலின் வழியே ஒருவித சோகமான வைப்’பை உறுதி செய்கிறது இந்தப் பாடல். “தனியாளா தவிச்சாலும் இதுவே மேலு”, “புடிச்ச நிலவ இருட்டில் தொலைச்சேன்” போன்ற சில வரிகள் கவனிக்க வைத்தாலும், “எடுடா சரக்க, அவள மறக்க” போன்ற வரிகள் நெருடல். காதலை மறக்க மதுவை நாடச் சொல்லும் அபத்தமான வரிகள். பாடலில் இசை மட்டும் தனியே ஸ்கோர் செய்கிறது. சோகத்தை மேலும் பிழியும் தனுஷின் குரல் பாடலுடன் பக்காவாக பொருந்துகிறது. Gen Z தலைமுறைக்கான காதல் தோல்வி பாடல் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். ‘3’ படத்தில் கொலவெறி பாடலை தொடர்ந்து அதேபோன்றதொரு முயற்சி இந்தப் பாடலில் தெரிகிறது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிங்கிள் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago