சென்னை: “சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காதபோது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அது தொடர்பாக ஆதரவளிக்கவும் எனக்கு நீண்ட நேரம் தேவையில்லை” என நயன்தாராவுக்கு ஆதரவளித்தது குறித்து நடிகை பார்வதி திருவொத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அது தொடர்பாக ஆதரவளிக்கவும் எனக்கு நீண்ட நேரம் தேவையில்லை. நயன்தாராவின் பதிவைப் பார்த்த உடனே அதனை பகிர வேண்டும் என தோன்றியது பகிர்ந்தேன். சுயமாக வளர்ந்தவர் நயன்தாரா. தன்னுடைய கரியரை தானே உருவாக்கி கொண்ட லேடி சூப்பர் ஸ்டாரே இப்படியான ஒரு பகிரங்கமான கடிதத்தை காரணமில்லாமல் எழுத வாய்ப்பில்லை. அவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் எதிர்கொண்ட அனுபவங்களை 3 பக்கங்களாக எழுதியுள்ளார். அதனால்தான் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
நயன்தாராவை ஆதரிக்கும் அனைவருக்கும் அந்தக் கடிதத்தில் இருக்கும் பிரச்சினை புரியும். ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் நம்மை போல மற்றவரைக் காண்போம். நான் அவரை ஆதரித்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஏனென்றால் நானும் இப்படியான ஓர் அனுபவத்தை கடந்தே வந்துள்ளேன். பல்வேறு நெருக்கடிகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டு தான் நயன்தாரா இந்த இடத்தை அடைந்துள்ளார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நயன்தாராவுக்கு ஆதரவாக பேசுவேன். ஆதரவு கிடைக்காமல் தவிப்பது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
நான் அதை கடந்து வந்திருக்கிறேன். ஆதரவு ஒருவரை எப்படி மாற்றும் என்பதையும் நான் அறிவேன். அந்த வகையில் யோசித்துப்பார்த்தால் ஆதரவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், குறிப்பாக அவர்கள் பெண்களாக இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்காக நான் உடன் நிற்பேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியது குறித்து நயன்தாரா கடிதம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு நடிகை பார்வதி முதல் நபராக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago