‘ஆடு ஜீவிதம்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘HMMA’ விருது! 

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘HMMA” (Hollywood Music in Media Awards 2024) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ப்ளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக ஹாலிவுட்டின் உயரிய விருதான ‘HMMA’ விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் சுயாதீன திரைப்படத்துக்கான (அந்நிய மொழி) பிரிவில் போட்டியிட்ட ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டமாக இந்த விருது கருதப்படுகிறது.

அண்மையில் படத்தின் இசை குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குநர் ப்ளஸ்ஸி, “ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையும், பாடல்களும் இந்தப் படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளன. படத்தின் பிஜிஎம் பாலைவனத்தில் போராடும் கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு உயிரூட்டியுள்ளது. ஒரு வகையில் பின்னணி இசையே தனித்த கதை சொல்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளின் ஆழத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்