திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் ஃபஹத் ஃபாசிலும், நயன்தாராவும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின் நடிகர்கள் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘டேக் ஆஃப்’, ‘உயரே’, ‘மாலிக்’ படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளது. இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா நடிக்கின்றனர். இவர்களை தவிர்த்து, நடிகர்கள் ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணை தயாரிக்கின்றனர். பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago