திரைப்பட இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, இயக்கியுள்ள ஆசான் என்ற குறும்படம் கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் ஜி.வனிதா தயாரித்துள்ள இந்தக் குறும்படத்துக்கு காந்த் தேவா இசை அமைத்துள்ளார். என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள இ.வி.கணேஷ்பாபு கூறும்போது, “கோவா பட விழாவில் எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. வரும் 23-ம் தேதி இந்தப் படம் திரையிடப்படுகிறது.
மாணவர்கள் செய்யும் குற்றத்துக்கு அவர்களைத் தண்டிப்பதை விட, தவறை உணரச் செய்வதன் மூலம் அவர்கள் வாழ்வை, ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago