அரசியல் க்ரைம் த்ரில்​லரில் கிஷோர், அபிராமி

By செய்திப்பிரிவு

கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்​துள்ள படம், ‘ஐபிஎல்’ (இந்​தியன் பீனல் லா). அரசியல் க்ரைம் த்ரில்லர் படமான இதை, ராதா ஃபிலிம் இன்டர்​நேஷனல் சார்​பில் ஜி.ஆர்​.மதன் கிருஷ்ணன் தயாரித்​துள்ளார். வெற்றி​மாறன், மணிமாறனிடம் உதவி இயக்​குநராக பணியாற்றிய கருணாகரன் இதன் மூலம் இயக்​குநராக அறிமுகம் ஆகிறார். எஸ் பிச்​சுமணி ஒளிப்​ப​திவு செய்ய, அஷ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்​துள்ளார்.

இந்தப் படம் பற்றி கருணாகரன் கூறும்​போது, ”நாட்​டில் நடைபெறும் சில குற்​றங்​களை செய்தித்​தாள்​களில் படித்து​விட்டு மறந்து விடு​கிறோம். அந்த சம்பவங்​களில் சிலவற்றின் பின்​னால், வெளி​யில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்​களும் பாதிக்கப்படுகிறார்​கள்.

அப்படி, செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்​சி​யின் காரண​மாகப் பாதிக்​கப்​படு​கிறது; அதிலிருந்து வெளி​யில் வர அவர்கள் என்ன செய்​கிறார்​கள்? என்பது​தான் படம். படப்​பிடிப்பு முடிந்து விட்​டது. 2 பாடல்கள் மட்டுமே பாக்கி. ஜனவரி​யில் படத்தை வெளி​யிடும் முயற்​சி​யில் இருக்​கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்