சென்னை: சரத்குமார் நடித்துள்ள ‘தி ஸ்மைல் மேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - மறதியை ஏற்படுத்தும் அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சரத்குமார். ஒரு வருடத்தில் அனைத்து ஞாபகங்களும் அழிந்துவிடும் என மருத்துவர் எச்சரிக்கிறார். தன்னுடைய உடல்நல பாதிப்புகளுக்கு இடையில் காவல் துறை அதிகாரியான அவர் கையில் வழக்கு ஒன்று வந்து சேருகிறது. அடுத்தடுத்த கொலைகள் காட்சிப்படுத்தப்பட குற்றவாளியை கண்டுபிடிக்கும் முனைப்பில் இருக்கும் சரத்குமார், “குற்றவாளியை நெருங்க முடியாது, அவரை என்னிடம் வர வைக்க வேண்டும்” என திட்டம் தீட்டுகிறார்.
காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. இறுதியில் கொலைகாரனின் முகத்தை மறைத்து, வண்ணம் பூசிய உதட்டை காட்டும் காட்சி வந்து செல்கிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட்டில் வெளியான ‘ஜோக்கர்’ பட நாயகனின் கெட்டப் போல தெரிகிறது. டீசர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மைல் மேன்: இயக்குநர் ஷாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள படம் ‘ஸ்மைல் மேன்’. ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும், சான் லோகேஷ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago